கோடி துளிகளை கொட்டி விடு

கொட்டி விடு கோடி துளிகளை கொட்டி விடு
இடித்து விடு பெரும் இடி கொண்டு இடித்து விடு.

பேராசை கொண்ட மிருகத்தை அழிக்க கொட்டி விடு
பாவிகள் வாழும் கோட்டைகளை அழிக்க இடி இடித்து விடு.

சுயநலவாதிகளை அழிக்க பெரும் வெள்ளமாய் வந்து விடு
பொதுநலவாதிகளை காத்து கரை சேர்த்து விடு.

மனித மிருகங்களை அழிக்க பெரும் அலையாய் வந்து விடு
நல்லதாய் விலங்குகள் வாழ வழி அமைத்துக்கொடு.

பெரும் லாபம் பார்ப்பவனை மக்கி விடு
வானம் பாத்து வாழ்பவனுக்கு வரம் கொடு.

கொட்டி விடு கோடி துளிகளை கொட்டி விடு
கோடி நல்லவர்களுக்காக கொட்டி விடு.

மழையே! கொட்டோ கொட்டென கொட்டி விடு!

#Thamizh #Rain #மழை

Advertisements